dhanush post captain miller movie update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் தனுஷ் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அதாவது, கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் அடுத்த மாதம் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் ஏற்கனவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அப்பதிவினை இணையதளத்தில் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…