தென்னிந்திய திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் நடைபெற்று வந்தது. ஆனால் மழை காரணமாக படப்பிடிப்பு சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்த இடைவேளையில் தனது அடுத்த படத்திற்கான பூஜையை போட்டு இருக்கிறார். அதாவது நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த கூட்டணியில் உருவாகும் இப்படம் 1950களின் கால பின்னணியில் பொலிட்டிக்கல் ஜானர் படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாக உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷின் இந்த புதிய படத்திற்கான பூஜை, ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.
#Dhanush joining hands with #ShekarKammula for a pan indian political action film. Formal pooja at Hyderabad Secunderabad Ganesh Temple today.
Budget 125 – 175cr
Dhanush
Tamil – Telugu – Hindi ( trilingual) #Vaathi #CaptainMiller pic.twitter.com/0PArDHcEVr— RAm KrIsh BASANI'????️????️ (@RamKris24199700) November 28, 2022

