Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்து அடுத்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் தனுஷ் படங்கள்.. தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரசிகர்கள்

dhanush-new-movie-release-details

தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாலிவுட் படமான “The Gray Man” திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதியும், “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது படமாக நானே வருவேன் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதாவது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் படம் தான் “நானே வருவேன்”. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான தானு தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக செல்வராகவன், யோகி பாபு, இந்துஜா,சுவீடவ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம் , பிரபு ஆகியோர் நடித்துள்ளனர் .

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ‘நானே வருவேன்’ படத்திற்கான ட்ரெய்லரும் தயாராகி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அன்றுதான் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush-new-movie-release-details
dhanush-new-movie-release-details