கோலிவுட்லிருந்து ஹாலிவுட் வரை தனது திரையுலக பயணத்தை விரிவு படுத்தி இருக்கும் நடிகர் தனுஷ் அவரது 39 ஆவது பிறந்த நாளை நேற்று கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பாசத்தோடு தெரிவித்து வந்தனர்.
மேலும் அவரது வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் பட குழுவினர்கள் நடிகர் தனுஷ்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அந்தப் படங்களில் இருந்து டீசர் மற்றும் பாடலை வெளியிட்டனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “என் பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு எனது அன்பையும், நன்றியையும், வெளிப்படுத்த வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன்.
கடந்த 20 வருடங்களாக என் சினிமா பயணத்தில், எனக்கு நம்பிக்கை அரணாக திகழும எனது ரசிகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நட்புறவுகளுக்கு என் நன்றி கலந்த வணக்கம் என தெரிவித்துள்ளார்”. மேலும் விரைவில் வெள்ளித்திரைகள் சந்திப்போம் என்றும் இறுதியாக ஓம் நமச்சிவாயா மற்றும் அன்புடன் D என தன்னுடைய பெயரின் முதல் எழுத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
???????????? pic.twitter.com/8XZJd41GYl
— Dhanush (@dhanushkraja) July 29, 2022

