இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை இந்த திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே, நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.
ஜிவி பிரகாஷ் உருவாகியுள்ள இந்த படத்தில் கதை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷின் தங்கையாக இருக்கும் ஷாலினி பாண்டே பணக்காரராக இருக்கும் சத்யராஜ் மகனை திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் அருண் விஜய் குடும்பத்தினருக்கும் தனுஷ் குடும்பத்திற்கும் இடையே ஏற்படும் மோதல் தான் கதை எனவும் சொல்லப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.