Dhanush continues to harass Karthik Subbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் டுவிட்டர் ஸ்பேசில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் தனுஷ் பேசும் போது, ஜகமே தந்திரம் படத்தின் வெளியீட்டுக்காக ரொம்ப நாளாக காத்துக் கொண்டு இருக்கிறோம். கடைசியாக இப்படம் மக்களிடம் போய் சேர இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த சுருளி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை இப்படத்தின் 2ஆம் பாகம் எடுக்க தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவிற்கு சுருளி ரொம்ப பிடித்திருக்கிறது.
இந்த படம் என் ரசிகர்கள் மட்டுமில்லை, மற்ற ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை கொடுத்து இருக்கிறது. ஆனால், பாடல்களை விட பின்னணி இசை சிறப்பாக இருக்கும் என்றார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…