Dhanush confirmed to direct H. Vinoth.. so the next episode is ready!
ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்!
தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். பின்னர் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை கொடுத்த வினோத் தொடர்ந்து துணிவு, வலிமை படங்களில் அவருடன் பணியாற்றினார். அவ்வகையில் ஏகே.வுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ தற்போது சென்சார் சிக்கல் காரணமாக, திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்தபட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜனநாயகனை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளில் படக்குழு இறங்கியுள்ளது.
இதற்கிடையில், தனுஷ் நடிப்பில் தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை வினோத் துவங்குவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் ‘கர’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘அமரன்’ பட பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
இதனையடுத்து ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதனால், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கான தேதிகளை ஒதுக்க யோசித்து வருகிறார். இருப்பினும், ‘ஜனநாயகன்’ படம் வெளியான பிறகு, வினோத் இயக்கவிருக்கும் படத்திற்கான பூஜை ஏபரல் மாதம் நடைபெறும் என கோலிவுட் வட்டாரம் கணிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…