Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் மற்றும் சிம்புவின் திரைப்படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

Dhanush and Simbu's films to be released on the same date

நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள், இவர்களுக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் நடிப்பில் விரைவில் அத்ராங்கி ரே திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி பிரபல OTT தளமான Hotstar-ல்வெளியாகிறது, ஏற்கனவே AR ரகுமான் இசையில் வெளியாகியுள்ள இப்பட பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படம் மாநாடு OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படம் SONY Liv -ல் வரும் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தற்போது இரண்டு டாப் நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.