தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.
இது குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
