நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு, அந்த நடிகைதான் காரணமா? அதிரும் திரையுலகம்!

3 படத்தில் நடிக்கும் போதே அப்படத்தின் நாயகி மீது மையம் கொண்டார் தனுஷ். இத்தனைக்கும் அப்படத்தை இயக்கியது அவரது மனைவி ஐஸ்வர்யாவே தான்.

ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ். ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தனுஷின் திறமைகளை பார்த்து ரஜினியே அவ்வப்போது சிலாகித்தது உண்டு. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண உறவு விவாகரத்தில் முடிந்தபோது கூட தனுஷ் மீது அலாதி பாசம் வைத்திருந்தார் ரஜினி. அடுத்தடுத்து தனுஷ் வளர, அவரே தடம் மாறிப்போனார் என்கிறது கோலிவுட் வட்டாரம். சமீபத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

3 படத்தில் நடிக்கும் போதே அப்படத்தின் நாயகி மீது மையம் கொண்டார் தனுஷ். இத்தனைக்கும் அப்படத்தை இயக்கியது அவரது மனைவி ஐஸ்வர்யாவே தான். அப்படத்தின் நாயகி மீது மோகம் கொண்டு தனியாகவே குடித்தனம் நடத்தி வந்தர் தனுஷ் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்து நையாண்டி படத்தில் நடித்த போது அப்படத்தின் நாயகி மீதும் மையம் கொண்டுள்ளார் தனுஷ் என்கிற தகவலும் வெளியானது.

அடுத்து வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டார் அந்த மில்க் நடிகை. அப்போது இருவருக்குள்ளும் ஃபையர் பற்றிக் கொண்டதாக கூறப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்தார் அந்த நடிகை. அந்தப்படத்தில் அறிமுக விழாவில் பேசிய நடிகை, ‘’நான் இனி தனுஷுக்கு உண்மையான மனைவியாக இருப்பேன்’ என்று கூறினார். இது படத்திற்கான ப்ரோமோஷனுக்காக அப்படி பேசினார் என்று கூறப்பட்டாலும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த நடிகை இயக்குநரை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தபோதும் விவாகரத்து செய்து விட்டார். இதற்கு காரணம் தனுஷ்தான் என்று பேசப்பட்டது. தன்னுடன் ஜோடி சேரும் நடிகைகளுடன் தனுஷ் கிசுகிசுகப்பட்டாலும் அந்த நடிகை மீது அவருக்கு அலாதி விருப்பம் என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்போது மட்டுமல்ல. அதற்கு முன்பிருந்தே தனுஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மன வருத்தம் இருந்து வந்ததாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். காரணம், ‘ரஜினி வீட்டிற்குள்ளேயே கபடி விளையாண்டு’ வந்ததும் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தனுஷுக்கும், அவரது மனைவிக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. ஆனால் வெளிப்படையாக இருவரும் காட்டிக் கொள்ளவில்லை. இனியும் தனுஷை நம்பி பிரயோசனம் இல்லை என்று கருதிய ஐஸ்வர்யா, தனியாக யோகா செண்டர் ஒன்றை நடத்தி வருமானம் ஈட்டி வந்துள்ளார். அங்கு பல விஐபிகள் வந்து யோகா கற்றுச் சென்றுள்ளனர். அதில் கணிசமாக வருமானம் ஈட்டி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் தான் விவாகரத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அத்தனை நடிகைகளுடன் தொடர்பிருந்தாலும் இப்போது வரை மில்க் நடிகையுடனான ஈர்ப்பே இந்த விவாகரத்துக்கு காரணம் என்கிறார்கள்.

சுசி லீகிக்ஸில் தனுஷை பற்றிய விவகாரம் கிளப்பப்பட்ட போதே ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் மனக்கசப்பு வந்து விட்டதாகவும் கூறுகிறார்கள் தனுஷின் நெருங்கிய வட்டாரத்தினர். தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.

தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு பிரிவை உறுதி செய்தார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் முதல் கணவரை விவாகரத்து செய்தார். சமீபத்தில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

திரையில் ஜொலிப்பவர்கள் குடும்ப வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள். நடிகர் தனுஷுக்கும் இந்த நிலையில் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசினோம். ‘‘நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என கருதப்படும் அதே இன்டிமேசி காட்சிகள் தான் நடிகர் தனுஷின் விவாகரத்துக்கும் காரணம் என கருதப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘3’ படத்திலேயே நடிகை ஸ்ருதிஹாசன் உடன் படு நெருக்கமாக தனுஷ் நடித்த போதே இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவானது. ஆனால், பேச்சுவார்த்தைகளின் மூலம் அது தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

நடிகை சமந்தாவுக்கு இங்கிலாந்து இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் விவாகரத்துக்கு காரணம் எனக் யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹாலிவுட்டில் நடித்து வருகிறார். மேலும், லிப் லாக் காட்சி, படுக்கையறை காட்சிகள் என நடிப்பின் உச்சத்துக்கு செல்வது குடும்ப உறவில் விரிசல் விழ வைக்கிறது.

ரியாலிட்டி என்கிற பெயரில் பொழுதுபோக்கு அம்சமான சினிமா எல்லை மீறுவதே இதுபோன்ற நடிகர்களின் சொந்த வாழ்க்கை பாதிக்க பெரிய காரணமாக அமைந்துவிடுகிறது. முன்னணி நடிகர்கள் அதிக நெருக்கமான காட்சிகளை தவிர்க்க காரணமும் இதுதான். சினிமா வேறு சொந்த வாழ்க்கை வேறு என புரிந்து கொண்டு சிலர் வாழ்வதால் குடும்ப உறவில் விரிசல் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள்’’ என்றனர்.

admin

Recent Posts

பெர்சிமன் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…

3 hours ago

Indian Penal Law (IPL) Official Teaser

Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…

3 hours ago

பைசன்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

3 hours ago

டியூட்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.??

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

3 hours ago

Singampuli Fun Speech at Mylanji Audio Launch

https://youtu.be/VtElaex2EB4?t=1

3 hours ago