தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு அடுத்ததாக அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய ஐம்பதாவது படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தனுஷின் ஐம்பதாவது படத்தை இயக்கப்போவது வெற்றிமாறன் தான். இந்த படத்தை வெற்றியைத் தவிர வேறு யாருக்கும் தர மாட்டேன் என தனுஷ் உறுதியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்பதால் இந்த படம் நிச்சயம் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதுவரை வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய 4 படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதே இதற்கு சான்று என்பது குறிப்பிடத்தக்கது.