டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியன் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ .
இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது.
ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார்.
ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரின் இயல்பான நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் 130 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அனுபவசாலி நடிகர் நெப்போலியனும் இணைந்திருக்கிறார். இப்படம் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார்.
இந்தப் படத்தின் திக் திக் நகர்வுகளுக்கு ஸ்விஃப்டி மெக்வே அமைத்திருக்கும் இசை உறுதுணையாக இருக்கிறது. சாகசங்கள் நிறைந்த கிரைம் த்ரில்லர் ரக படம் இது.
டெட்ராய்ட்டை அடுத்திருக்கும் சிறிய நகரம் ஒன்றில் தொடர்ந்து கொலைகள் நடப்பதையும் அதை இரு காவல் துறை அதிகாரிகள் துப்பறிவதும்தான் கதை.
கதையோட்டத்தில், அமானுஷ்யமான நைன் ரோக் நுழைவதிலிருந்து பார்ப்பவர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிடுவார்கள்.
மனிதனும் மனிதன் அல்லாத இருள் சூழ் உலகவாசிகளும் விசித்திரமான கோர சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இப்படி திக் திக் அனுபவங்களுடன் கதை நகர்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் தாங்கள் வழக்கம்போல வல்லுநர்கள் எனபதை CINEDIGM மீண்டும் நிரூபித்திருக்கிறது. விரைவில் இந்தியாவில் டெவில் நைட்ஸ் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…