Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

டிடி ரிட்டன்ஸ் திரை விமர்சனம்

DD Returnes Movie Review

நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கும் சந்தானத்திற்கும் சுரபிக்கும் காதல் ஏற்படுகிறது. சுரபியை திருமணம் செய்ய சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை பார் உரிமையாளரான பெப்சி விஜயனிடம் திருடி சுரபியின் வீட்டில் கொடுக்க அதனால் ஏற்படும் விளைவுகளே மீதிக்கதை. பேய்களுடன் கேம் விளையாடி பங்களாவில் சந்தானம் அடிக்கும் நையாண்டி வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. கலாய்ப்பதில் பேயையும் விடவில்லை. வழக்கம்போல் மொட்டை ராஜேந்திரனின் வில்லத்தனத்துடன் கூடிய காமெடி அரங்கை அதிர வைக்கிறது.

பார் உரிமையாளராக வரும் பெப்சி விஜயன் பணத்தை பறிகொடுத்து பேயுடன் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள் காமெடி வில்லனாக அவரை மாற்றி உள்ளது. காமெடி நடிகராக முன்னேறி வரும் தங்கதுரைக்கு இந்த படம் பாலமாக அமைந்துள்ளது. பேயாக வரும் மசூம்சங்கர், பிரதீப் ராம் சிங் ராவத் ,பிபின், ரீட்டா மானஸ்வி, ஜீவா படம் முழுக்க அந்தரத்திலேயே பறந்து பேயாக வந்து ரசிக்க வைக்கிறார்கள். பழிவாங்கும் கதை, திகில் படங்களுக்கு மத்தியில் திகிலான கதை ரசிகர்களுக்கு குதூகலமான காமெடி விருந்தாக வந்துள்ளது டிடி ரிட்டன்ஸ்.

இதுவரை வந்த பேய் படங்கள் போல் இல்லாமல் திகிலுடன் சிரிப்பு கலந்து குதூகலமான ஒரு படத்தை தந்துள்ளார் இயக்குனர் பிரேம் ஆனந்த். பேய் என்றால் குழந்தைகளுக்கு பயம் ஏற்படும். அந்த பயத்தை போக்கி பேயை பார்த்தால் சிரிக்க வைத்துள்ள படம் டிடி ரிட்டர்ன்ஸ். தீபக்குமார் ஒளிப்பதிவும் ஆப்ரோவின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் டிடி ரிட்டன்ஸ் – காமெடி ரிட்டன்ஸ்.

DD Returnes Movie Review

DD Returnes Movie Review