Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

DD யின் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான தகவல்.

dd-divyadharshini-second-marriage

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தன்னுடைய பள்ளி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்‌. ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதனையடுத்து கடந்த சில வருடங்களாகவே திவ்யதர்ஷினி சிங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் உடன் நெருங்கி பழகி வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என சொல்லப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் டிடி இந்த விஷயம் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். அவரது இரண்டாவது திருமணம் குறித்த தகவல் உண்மையா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் உறுதியாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

dd-divyadharshini-second-marriage
dd-divyadharshini-second-marriage