கதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்

நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது நட்சத்திர ஓட்டலில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்தார். போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே தடக் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட்லக் ஜெர்ரி ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து போனிகபூர் கூறும்போது ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார். பிரபல இயக்குனர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

10 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

14 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

14 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

14 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

14 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

14 hours ago