பேரிச்சம்பழம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைவது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாகவே பேரிச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் கிடையாது. கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்கள் பேரிச்சம்பழத்தை சாப்பிட வேண்டும். நாம் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்பது பார்க்கலாம். பேரிச்சம் பழத்தில் கனிமங்கள் சர்க்கரை கால்சியம் இரும்பு பொட்டாசியம் போன்ற பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பேரிச்சம்பழத்தில் உள்ளது.
இதய நோய் உயர் ரத்த அழுத்த பிரச்சனை மற்றும் கொலஸ்ட்ரால் பக்கவாதம் போன்ற நோயாளிகளுக்கு பேரிச்சம்பழம் மருந்தாக இருக்கிறது. நம் இதயத்தில் கொழுப்புகள் சேராமல் தடுத்து ரத்தக் கட்டிகள் உண்டாக்கும் சிக்கலில் இருந்து விலக்கி தீர்வு கொடுக்கும்.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் துத்தநாகம் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து அதே நேரத்தில் மெக்னீசியம் ரத்த சர்க்கரையையும் ஒழுங்கு படுத்துகிறது.
நாம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டாலே போதுமானது. நாம் அளவுக்கு அதிகமாக பேரிச்ச பழம் சாப்பிடும் போது அதில் சர்க்கரை உள்ளதால் அது தேவையற்ற விளைவுகளையும் கொடுத்து விடும்.
எனவே அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

