dada-hero-kavin-thanking-video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவரது நடிப்பில் சமீபத்தில் ‘டாடா’ திரைப்படம் வெளியானது. கணேஷ் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி லோ பட்ஜெட் திரைப்படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று பிரபல ott தலமான அமேசான் ப்ரைம் தளத்திலும் இப்படம் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், டாடா திரைப்படத்திற்கு நாங்கள் நினைத்ததை விட திரையரங்குகளில் நீங்கள் அனைவரும் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. எங்கள் நம்பிக்கையை நீங்கள் வீணாக்கவில்லை. எங்களது 12 வருட கனவை நினைவாக்கிய அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி, காசு கொடுத்து படம் பார்த்த ஒவ்வொருத்தருக்கும் நன்றி எனக் கூறியிருக்கிறார்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…