குந்தவை கதாபாத்திரத்தில் விதவித போட்டோ ஷூட். பொன்னியின் செல்வன் படக் குழு வெளியிட்ட வீடியோ

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்திருந்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இதன் வரவேற்பை தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடிகை திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்திற்காக பல்வேறு தோற்றத்தில் எடுக்கப்பட்டிருந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

17 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

17 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

18 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

18 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

18 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

19 hours ago