D3 Movie Review
காவல்துறை ஆய்வாளராக இருக்கும் நாயகன் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன் குற்றாலத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, லாரியில் அடிபட்டு இறந்த பெண்ணின் வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் பிரஜின். மீண்டும் ஒரு விபத்து நடக்க, இரு விபத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையை கண்டுபிடிக்கிறார் பிரஜின்.
குற்றவாளி யார் என நெருங்குவதற்கு முன், பிரஜினின் மனைவியாக வரும் வித்யா பிரதீப்பையும் குற்றவாளிகள் கொலை செய்து விடுகின்றனர். இறுதியில் இந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்கிறார்கள்? விபத்துகள் ஏற்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்து இருக்கும் பிரஜின், இப்படத்திற்காக அதிகமான உழைப்பை கொடுத்திருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆனால், பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. நாயகியாக நடித்து இருக்கும் வித்யா பிரதீப்பிற்கு சொல்லும்படியாக பெரிதான காட்சிகள் எதுவும் இல்லை. இயக்குனர் பாலஜி கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் படத்தில் பெரிதாக சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. கதாபாத்திரங்களிடம் வேலை வாங்க மறந்துவிட்டார்.
கிளைமாக்ஸில் டுவிஸ்ட் இருந்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. ஸ்ரீஜித் எடவானா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு திரையோட்டத்திற்கு உதவி இருக்கிறது.
மொத்தத்தில் டி3 – சுவாரஸ்யம் குறைவு
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…