actor-soori-six-pack-photo
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூர்யாக அழைக்கப்பட்டு அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் காமெடியனாக நடித்து தற்போது தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
இவர் தற்போது கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக இருக்கும் கொட்டு காளி என்னும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் சூரி பதிவிட்டு இருக்கும் புகைப்படம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
அதில் அவர், கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பாக்குடன் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ‘இன்றைய வலி நாளைய வெற்றி’ என மோட்டிவேஷனல் பதிவுடன் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…