Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதலில் ‌ஒரு வருடத்திற்கு முன்பு பென்சியாவை திருமணம் செய்த புகழ்.. வைரலாகும் போட்டோ

cwc pugazh-is-already-married-with-bensiya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிசயமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் தனது நகைச்சுவையை தாறுமாறாக வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது பிசியான நடிகராக வலம் வரும் புகழ் “ஜூ கீப்பர்” என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பென்சியா என்கின்ற பெண்ணை செப்டம்பர் 1ஆம் தேதி காலை சிறப்பாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நடிகர் சசிகுமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் திருமண புகைப்படங்களை புகழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் புகழ், பென்சியாவை ஒரு வருடத்திற்கு முன்பாகவே மதமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் என்பதால் கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே புகழ், பென்ஸியாவை கோவை பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இவர்களுக்கு திருமணத்தை நடத்திவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 cwc pugazh-is-already-married-with-bensiya

cwc pugazh-is-already-married-with-bensiya