Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அலங்கு பட நடிகர் குணாநிதியுடன் கூட்டணி.. விருது விழாவில் அறிவித்த தயாரிப்பாளர் சி.வி குமார்..!

CV Kumar presented an award to Alangu actor Guna Nidhi

அலங்கு பட நடிகர் குணாநிதிக்கு சுகாதார பராமரிப்பு விருது வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார்.

கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல் இயக்க மேக்னாஸ் ப்ரொடக்ஷன் மற்றும் டிஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் குணாநிதி.

இந்நிலையில் வானம் டாக்கீஸ் மருத்துவ மகுடம் 2025 சார்பாக நடிகர் குணாநிதிக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சி.வி குமார் விருது வழங்கியுள்ளார். அதில் டாக்டர் குணாநிதிக்கு சுகாதார பராமரிப்பு விருதை வழங்கி கௌரவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று பதிவிட்டு அவார்ட் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

குணாநிதி மற்றும் சி.விகுமார் கூட்டணி :

விருது வழங்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சி.பி குமார் அவர்கள் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அட்டக்கத்தி,பீட்சா,சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற படங்களை தயாரித்து உள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், அட்டகத்தி தினேஷ் மற்றும் பலருக்கு வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளார்.

மேலும் அலங்கு படத்தை பார்த்து பாராட்டிய சி.வி குமார் விரைவில் குணாநிதியுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் சொல்லியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.