கூலி படம் குறித்து சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா,ஸ்ருதிஹாசன், சத்தியராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் இந்த படத்தில் முதல் பாகத்தை பார்த்து பாராட்டி இருந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த மாதம் இந்த படத்தின் சிங்கிள் அல்லது ப்ரோமோ பாடல் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும்,ஓடிடி உரிமையை போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் கூலி படம் சென்டிமென்ட் ஆக இருக்காது என்றும் லோகேஷ் தரமான சம்பவம் செய்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
