Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த கூல் சுரேஷ்.. வைரலாகும் வீடியோ

cool-suresh-video-posted-for-str-fans

தமிழ் திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. டி ஆரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி மாசாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து தற்போது ஓ டி டி தளத்திலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் பேரான ‘வெந்து தணிந்தது காடு STRக்கு வணக்கத்தை போடு’ என்ற வசனத்தை சொல்லி தமிழகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆன நடிகர் கூல் சுரேஷ் தற்போது ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்து வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு அவர் பேசிய வசனம் ரசிகர்களின் மதில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் STRன் அடுத்த படமான பத்து தல படத்திற்கும் அதேபோல் சூப்பரான வசனத்தை தனக்கு ரெக்கமண்ட் செய்யுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.