தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் மிகுந்த ஆராதாரத்துடன் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை காண சிம்புவின் தீவிர ரசிகரும் பிரபல நடிகருமான கூல் சுரேஷ் ஹெலிகாப்டர் உடன் வருகை தந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது, நடிகர் கூல் சுரேஷ் பத்து தல முதல் ஷோவை பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன், எனது வீட்டை விற்றாவது கண்டிப்பாக ஹெலிகாப்டரில் என ஆவேசமாக பேட்டி ஒன்றில் முன்பு கூறியிருந்தார். அதன்படி இன்று வெளியான பத்து தல திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகர் கூல் சுரேஷ் குழந்தைகள் விளையாடும் பொம்மை ஹெலிகாப்டரை கையில் தூக்கிப் பிடித்தபடி வருகை தந்துள்ளார். அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
COOL entry with helicopter ???????? #PathuThalaFDFS#PathuThala #SilambarasanTR @SilambarasanTR_ @StudioGreen2 @RohiniSilverScrpic.twitter.com/QHO9z5FlHh
— Kamal STR ???? (AGR) (@kamal_STR1) March 30, 2023

