தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான திரைப்படம் விருமன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வழக்கம்போல படத்தைப் பார்த்து கூல் சுரேஷ் இந்த படம் பற்றியும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் அதிதி சங்கர் நடிப்பை பாராட்டியது மட்டுமல்லாமல் உங்க பொண்ண நான் காதலிக்கிறேன் ஒழுங்கா எனக்கு கட்டிக் கொடுங்க என பேசி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் உங்க கூட நடிக்கிறது உங்க அண்ணி பார்த்து நடிங்க என கூறியுள்ளார். அதிதி அடுத்ததாக மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருவதால் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
