Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

cook with comali season 6 title winner update

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த தற்போது ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

தற்போது பைனல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. டைட்டில் வின்னராக யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

அதாவது ஷபானா தான் டைட்டிலை வென்றுள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது ராஜு தான் டைட்டிலை வென்றுள்ளதாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் பிக் பாஸ் டைட்டில் வென்றது இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். உங்களுக்கு யார் டைட்டிலை வெல்ல வேண்டும் என்பதை எங்களோடு கமெண்ட் பகிர்ந்து கொள்ளுங்கள்.