Tamilstar
Health

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க..!

கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க குடிக்க வேண்டிய ஜூஸ்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் வந்தால் அது நம் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்ததே. அப்படி கொலஸ்ட்ராலை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்வது வழக்கம் . எளிமையான முறையில் சில ஜூஸ் பயன்படுத்தி எப்படி கொலஸ்ட்ராலை குறைப்பது என்று பார்க்கலாம்.

பூசணிக்காய் ஜூஸ் தொடர்ந்து குடித்து வரும்போது அது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் கேரட் மற்றும் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் நல்லது. மேலும் கீரை சாறு அதிகம் குடிக்கும் போது அது கெட்ட கொழுப்பை கரைப்பது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமலும் பாதுகாக்கிறது.

எனவே ஆரோக்கியம் நிறைந்த ஜூஸ்களை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.