வெந்தயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களின் முக்கியமான ஒன்றாக இருப்பது வெந்தயம். இதில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து விடுபடமும் உதவும் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அதனை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தயம் அதிகமாக சாப்பிடும் போது அது வாயு பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இது மட்டுமில்லாமல் ஒவ்வாமை பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தி இருமல் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
எனவே உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தரும் வெந்தயம் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு தீங்கை விளைவுக்கும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

