Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காமெடி நடிகர் போண்டாமணி மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

comedy actor bonda mani passes away

தமிழ் சினிமாவில் வின்னர், சுந்தரா ட்ராவல்ஸ் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் போண்டா மணி. வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் கடந்த ஒரு வருடம் ஆக உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்காக உதவி கேட்டு வந்தார். இந்த நிலையில் போண்டாமணி நேற்று வீட்டில் திடீரென மயங்கி விட அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். போண்டா மணியின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‌

comedy actor bonda mani passes away
comedy actor bonda mani passes away