coffee with kathal movie release date update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர்தான் இயக்குனர் சுந்தர் சி. காமெடிக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் “காஃபி வித் காதல்”. இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை குஷ்பூ சுந்தர்.சி தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய தகவலாக இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி காஃபி வித் காதல் திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவிப்பை இப்படத்தை வழங்க இருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் twitter பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் சுந்தர் சி யின் ரசிகர்கள் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…