அடர்த்தியாக முடி வளர தேங்காய் பால் உதவுகிறது.
தேங்காய் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும். இது முடியை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேங்காய் பால் ஷாம்பூ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
முதலில் தேங்காய் பால் தேவையான அளவு எடுத்துக் கொண்டு அதில் வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டால் தேங்காய் பால் ஷாம்பூ ரெடி. இதனை 25 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனவே ஆரோக்கியம் மற்ற முறையில் செயற்கையாக தயாரிக்கப்படும் ஷாம்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வது, வளராமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதை விட இயற்கையான முறையில் நாம் தேங்காய் பால் ஷாம்பு பயன்படுத்தி முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாமலும் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம்.