இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் தேங்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.
பொதுவாகவே தேங்காயில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் வைட்டமின்கள் தாது உப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் போன்ற சத்துக்கள் மிகவும் அதிகமாகவே உள்ளது.
இதில் இருக்கும் தண்ணீர் உடலின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும் அதன் எண்ணெய் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கவும் பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது ஏனெனில் இது கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவதை குறைக்கிறது. மேலும் தேங்காய் ஒரு மிகச்சிறந்த ஆண்டிபயாட்டிக் என்றும் அழைக்கப்படும் ஏனெனில் நம்மை ஒவ்வாமை மற்றும் அலர்ஜி பிரச்சனையில் இருந்தும் மலச்சிக்கல் வயிற்றில் பூச்சி இருப்பது போன்ற பிரச்சனையில் இருந்தும் பெருமளவில் பாதுகாக்கிறது.
ஏனெனில் தேங்காயில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது தேங்காயில் உள்ள லாரிக் மற்றும் காப்ரிக் அமிலம் வைரஸ் பாக்டீரியாவில் இருந்து நம்மை பாதுகாத்து நோய்களிலிருந்து நம்மை விடுவிக்க பயன்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாம் தினமும் காலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் அல்சீமர் குணமடைய சிறந்த மருந்தாகும்.

