cobra-movie latest update
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர்தான் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “கோப்ரா”. இப்படத்தை பிரபல இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்க மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கன்னிகா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அடுத்து கடந்த ஜூலை 11ஆம் தேதி படத்திற்கு இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது இப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி அல்லது செப்டம்பர் 8டாம் தேதி வெளியாகலாம் என்று சொல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…