வீட்டுக்கு வர மறுத்த பாக்கியா…ஈஸ்வரி எடுத்த முடிவு..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஈஸ்வரி பாக்யாவை பார்த்து பேசி வீட்டிற்கு அழைக்க அவர் நான் எப்படி அந்த வீட்டுக்கு வருது நான் வரல. திரும்பத் திரும்ப இதையே சொல்றதால உங்களை மதிக்காம பேசுறனு மட்டும் நினைச்சுடாதீங்க என உறுதியாக கூறிவிடுகிறார்.

இந்த பக்கம் மயூராவுக்கு காய்ச்சல் குறையாத காரணத்தினால் அவரை ஊருக்கு அழைத்துச் செல்லக்கூடாது உடம்பு சரியாகும் அதன் பிறகு போய்க்கொள் என ராதிகாவின் அம்மாவும் அண்ணாவும் கூறுகின்றனர்.

வீட்டில் ஈஸ்வரி கணவரிடம் பாக்யா நான் கூப்பிடும் வரவில்லை என சொல்லிட்டா என சொல்லி வருத்தப்பட அவ அதிகமா காயப்பட்டு இருக்கா என வேணுகோபால் கூறுகிறார். இந்த நேரத்தில் கோபி கீழே வர செழியன் அவரை அழைத்து பாட்டி பொய் அம்மாவ கூப்பிட்டாங்க ஆனா அவங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால பாட்டி அம்மா மேல கோவமா இருக்காங்க என கூறுகிறார்.

உடனே ஈஸ்வரி நான் பாக்கியா மேல கோவமா இருக்கேன்னு சொன்னனா என சத்தம் போடுகிறார். இப்படி ஒரு விஷயத்தை செஞ்சுட்டு உன்னால் எப்படி இந்த வீட்ல நடமாட முடியுது எங்க முகத்தை எப்படி பார்க்க முடியாது என கோபியை பார்த்து கேள்வி பதில் கேள்வி கேட்கிறார். பாக்யா மட்டும் இந்த வீட்டுக்கு வரலைன்னா அவங்க அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு அவங்க வந்து உன்னை நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க என்ன பதில் சொல்லப் போற என கேட்கிறார்.

அது மட்டுமல்ல ஜெனியோட வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சா அவங்களும் வந்து விசாரிப்பாங்க மருமகளை வச்சுக்கிட்டு செய்யற வேலையா இது என கேப்பாங்க. சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா என்ன பதில் சொல்றது இது எல்லாம் யோசிக்காமல் இப்படி பண்ணிட்டு நிக்கிற என திட்டுகிறார். பாக்கியா இந்த வீட்டுக்கு வரலைன்னா நாங்க யாரும் இருக்க மாட்டோம். உன் சந்தோஷம் தான் முக்கியம் என்று இப்படி பண்ணல சந்தோஷமா இரு என்று சொல்லிட்டு நாங்கள் எல்லோரும் கிளம்பி போய்கிட்டு இருப்போம். அதோட செத்தா கூட எங்க முகத்துல முழிக்க கூடாது என ஈஸ்வரி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியா மட்டும் உங்க வீட்டுக்கு வரலைன்னா உன்னை நான் சும்மா விடமாட்டேன். இப்ப கூட அவ இந்த வீட்டுக்கு வருவான்னு ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் பேசிக்கிட்டு இருக்கேன் என கோபிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார் ஈஸ்வரி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

1 day ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

1 day ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

1 day ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

1 day ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

1 day ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

1 day ago