தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா. இவர்களின் மகளான பிரியதர்ஷினிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (05-07-2021) சென்னையில் நடைபெற்றது.
இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர், எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.