தமிழ் சினிமா கொரொனாவால் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருவார்களா என்பது தான் கேள்வி குறியாகியுள்ளது.
ஏனென்றால் கொரொனா அச்சத்தால் மக்கள் மீண்டும் திரையரங்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர்.
இதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் பல முடிவுகளை எடுத்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் டிக்கெட் வழங்குவது, டிக்கெட் விலையை கூட குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக சில வரிகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.