சியான்கள் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சில படங்கள் மட்டுமே நல்ல கருத்துக்களை கொண்ட படங்களாக வெளியாகின்றது.
அந்த வகையில் இந்த வருடம் முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாகி டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் சியான்கள்.
கே எல் கரிகாலன் அவர்கள் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தை வைகரை பாலன் இயக்கி உள்ளார். முத்தமிழ் என்பவர் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் டிஜி தியாகராஜன் அவர்கள் வெளியிட இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

