Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சியான் 61 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

chiyan61-movie-heroine details

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் இருக்கும் ‘சியான் 61’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

சியான் 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடப்பாவில் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும், அதன்பின் மதுரையிலும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெறும் என்று தகவல் அண்மையில் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி சியான் 61 திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பூ படத்தின் மூலம் அறிமுகமாகி மரியான், உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ரங்கன் கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 chiyan61-movie-heroine details

chiyan61-movie-heroine details