‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் இருக்கும் ‘சியான் 61’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
சியான் 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடப்பாவில் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும், அதன்பின் மதுரையிலும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெறும் என்று தகவல் அண்மையில் வெளியானதை தொடர்ந்து இப்படம் குறித்த புதிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில், ”சீயான் 61 பட அப்டேட் விரைவில் வெளியாகும், வெறித்தனமாக இருக்கப் போகிறது. இசையைப் பொறுத்தவரை பணிபுரிவதற்கு மிக சுவாரசியமான படம்” என்று அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் #Chiyaan61 என்ற பெயரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
