தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
கடைசியாக சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் சியான் விக்ரம் அவரது ரசிகர்கள் ஆசைப்படி அவரை அழைத்து சென்று செல்பி எடுத்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சியான் விக்ரம் தங்களுடைய ரசிகர்களுக்கு எப்போது மரியாதை அளிப்பவர். அந்த வகையில் தற்போது இந்த வீடியோவை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தட்றா லைக் அன்ட் கமெண்ட்ஸ்-அ❤️
இந்த அன்பு தான் ஸார் தலைவர் கூட பயணிக்க வைக்குது????????????#ChiyaanVikram pic.twitter.com/XLLZfJqGx7
— SaravanaAnandhCVF (@jsaravanaa28) March 1, 2022