Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தப் படங்கள் தான் கடைசி.. விக்ரம் கொடுத்த ஷாக் தகவல்..

chiyaan-vikram-decision-on-cinema carrier

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். உலகம் முழுவதும் நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சோழா சோழா என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சியான் விக்ரம் தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

அதாவது மணிரத்தினம் மற்றும் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள படங்களில் நடித்துவிட்டு நடிப்பை நிறுத்தி விட போகிறேன் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் உடல் நல குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று மீண்டு வந்த சியான் விக்ரம் உடல் நலம் கருதி இப்படியான முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

chiyaan-vikram-decision-on-cinema carrier
chiyaan-vikram-decision-on-cinema carrier