போஸ்டருடன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தங்கலான் படக்குழு

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாகவும் இன்னும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகபடுத்திருந்ததை தொடர்ந்து தற்போது படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி இப்படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

14 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

14 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

14 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

14 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

15 hours ago