‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோபுரா’ திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் “சியான் 61” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த சியான் 61 படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
இயக்குனர் பா ரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்கியிருக்கும் படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் பா.ரஞ்சித் விக்ரமின் “சியான் 61” படத்திற்கான வேலையை ஆரம்பித்துள்ளார்.
அதாவது விக்ரம் நடிக்க இருக்கும் இந்த “சியான் 61” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் இப்படத்திற்கான பூஜையை இன்று சென்னையில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கோலாகலமாக நடத்தியுள்ளனர். இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

chiyaan-61-movie-pooja-photos