Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சியான் 61 படம் குறித்து வெளியான சூப்பர் ஹிட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

chiyaan-61-movie-details

‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் “சியான் 61” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் இப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த சியான் 61 படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கிக் கொண்டிருந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படம் தற்போது திரைக்குவர தயாராக உள்ளதால் தற்போது பா.ரஞ்சித் விக்ரமின் சியான் 61 படத்தை விரைவில் இயக்க உள்ளார்.

அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் சென்னையில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை பொங்கலன்று ரிலீஸ் செய்யப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதற்கான அதிகாரவூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 chiyaan-61-movie-details

chiyaan-61-movie-details