Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சித்தா படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சித்தா’. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், ‘சித்தா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chithha movie ott release Update
Chithha movie ott release Update