Chiranjeevi supports Prakash Raj
தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் நிற்கிறார்கள்.
கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் போட்டியிடக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பினர். பிரகாஷ் ராஜும் “நான் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தபோது யாரும் கன்னடர் என்று கேள்வி எழுப்பவில்லை. தெலுங்கு நடிகர்கள் மேம்பாட்டுக்கு பாடுபடவே தேர்தலில் நிற்கிறேன்” என்றார்.
சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் ராஜ் தற்போது குணமடைந்துள்ள நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசினார். தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் மூலம் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…