chinmayi and vijay sethupathi
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, “கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…