Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படம் தோல்வியா? பிரபல விநியோகஸ்தர் ஓபன் டாக்

Chengalpet Distributor About Valimai Movie

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் செங்கல்பட்டு ஏரியாவில் படம் படு தோல்வி அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் யார் என்ன வேண்ணாலும் சொல்லட்டும் ஆனால் வலிமை படம் எனக்கு நஷ்டத்தை தரவில்லை, லாபம் தான் கொடுத்தது என தெரிவித்துள்ளார். விநியோகிஸ்தரின் இந்த பேட்டி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ‌‌

Chengalpet Distributor About Valimai Movie
Chengalpet Distributor About Valimai Movie