தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று வந்தனர்.
குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்து வெளியேறி சன் டிவியில் ஐக்கியமாகியுள்ளது. அதே நேரத்தில் வெங்கடேஷ் பட்டும் அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றுவிட்ட நிலையில் செக் தாமு குறித்து பேசியுள்ளார்.
அதாவது, செஃப் தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வீடியோ வெளியிட்டு அதன் பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். வாக்கு மாறினாலும் நட்பு மாறாது என பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக என்னை நடுவராக கூப்பிட்ட போது நான் தான் செஃப் தாமுவும் இருக்க வேண்டும் என்று பேசி டிவி சேனலை சம்மதிக்க வைத்தேன்.. நான் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தாமுவும் வெளியேறினார். அதன் பிறகு விஜய் டிவி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த அவர் மனசு மாறி இங்கேயே இருந்து விட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நான் அவரிடம் பேசவே இல்லை. விஜய் டிவி என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை, ஆகையால் வெளியேறி விட்டேன் என தெரிவித்துள்ளார்.